Wednesday, September 8, 2010

இஸ்லாமிய பொது அறிவு போட்டி – வினாக்களுக்கான விடைகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - நாகங்குடி கிளை

முதலாம் ஆண்டு ரமலான் இஸ்லாமிய பொது அறிவு போட்டி – வினாக்களுக்கான விடைகள்

1. ரமலான் மாதம் ஏன் புனிதமான மாதமாக அல்லாஹ் கூறுகினான் ? அதற்கான திருக்குர் ஆன் வசனம் என்ன ?
பதில்: ரமலான் மாதத்தில் நன்மையையும் தீமையையும் பிரித்தறிவிக்ககூடிய திருக்குர் ஆன் இறக்கி அருளப்பட்டது எனவே இது புனிதமான மாதமாகும் 2:185

2. நோன்பாளிகள் சொர்க்கத்தில் எந்த வாசல் வழியாக அழைக்கப்படுவார்கள் ?
பதில்: ரையான் – (புகாரி 1896)

3. நிய்யத் என்றால் என்ன ?
பதில்: ஒருவர் எந்த அமலை செய்தாலும் அந்த அமலை செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருக்கவேண்டும். எண்ணமே நிய்யத் ஆகும். வாயால் மொழியத்தேவையில்லை. ஹஜ்ஜின் தல்பியாவைத்தவிர.

4. திருக்குர் ஆன் முஸ்லீம்களுக்கு மட்டும் அருளப்பட்ட வேதமா ? இல்லை அகில உலக மக்களுக்கும் உண்டான வேதமா ? இதை பற்றி கூறும் வசன எண் அத்தியாயத்தை குறிப்படுக.
பதில்: அகில உலக மக்களுக்கும் வழிகாட்டியாக அருளப்பட்ட வேதம் – (68:52)
இது போல் மேலும் சிலவசனங்கள் குர் ஆனில் உள்ளன.


5. ரமலானிலும் ரமலான் அல்லாத காலத்திலும் நபி(ஸல்) அவர்களின் இரவுத் (தராவீஹ்) தொழுகை எத்தனை ரக் அத்களாக இருந்தது என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கக்கூடிய ஹதீஸை குறிப்பிடுக.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் 11 ரக் அத்துகளை விட அதிகமாக தொழுததில்லை. புகாரி 1147, 2013,3569

6. நம்முடைய பெற்றோருக்காக நாம் எவ்வாறு துஆ செய்ய வேண்டும் என அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகிறான் ?
பதில் : இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீ தாழ்த்துவீராக!. மேலும் என் இறைவா நான் சிறு பிள்ளையாக இருந்த போது என்னை பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல் நீயும் அவ்விருவருக்கும் கிருபை செய்வாயாக என்று பிரார்த்திப்பீராக. குர் ஆன் – அத்:17 வசனம் 24



7. அல்லாஹ்வை திக்ர் (நினைவு கூறல்) எவ்வாறு செய்ய வேண்டும்? இதை குர் ஆனில் 7வது அத்தியாயத்தை புரட்டுக ? வசனத்தை எழுதுக.
அல்லாஹ்வை நினைவு கூறும் போது பணிவுடனும் அச்சத்துடனும் குறிப்பாக சொல்லில் உரத்த சப்தமின்றி செய்யவேண்டும். அல் குர்ஆன் அத்:7 வசனம்:205 அதற்கு மாறாக செய்தால் அல்லாஹ் கூறியதற்கு மாறு செய்வதாகும்

8. மார்க்கத்தை கற்று அதன்படி செயல்படாதவர்களின் நிலையை அல்லாஹ் எதனுடன் ஒப்பிடுகிறான் ?
ஏடுகளை சுமக்கும் கழுதைக்கு ஒப்பானதாகும் குர் ஆன் 62:5

9. 40 வயதாகும் போது ஒருவருக்காக அல்லாஹ் துஆ செய்யச்சொல்கிறான் யாருக்காக ? திருமறை வசனத்தை குறிப்பிடுக ?
விடை: பெற்றோருக்காக துஆ செய்யும் படி இறைவன் குறிப்பிடுகிறான். (”மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும் படி நாம் உபதேசம் செய்தோம்” என ஆரம்பிக்கும் குர் ஆன் வசனமாகும்) குர் ஆன் அத்:46 வசனம்:15

10. சூரத்துல் யாஸீனில் 70வது வசனத்தின் மூலம் நாம் பெறும் விளக்கம் என்ன ?
இந்த குர் ஆன் உயிரோடு இருப்பவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே அனுப்பப்பட்டதாகும் இறந்தவர்களுக்கு ஓதுவதற்காக அல்ல என்று இந்த வசனம் தெளிவு படுத்துகிறது.
”இது உயிரோடு இருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது. நிராகரிப்பவர்களுக்கு தண்டணை உண்டு என்ற வாக்கை உண்மையென உறுதி படுத்துகிறது” அல்குர் ஆன் – யாஸீன் -70


11. இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று கூறும் திருக்குர் ஆன் வசனம் என்ன ?
நிச்சயமாக நீர் மரணித்தோரை செவியேற்க செய்ய முடியாது. அவ்வாறே செவிடர்களையும் அவர்கள் புறங்காட்டி திரும்பி விடும்போது (உம்) அழைப்பை நீ செவியேற்க செய்ய முடியாது. 27: 80, 30:52

12. மெஹ்ராஜ் பயணத்தின் போது நரகத்தில் பெண்கள் அதிகமாக இருப்பதை நபி(ஸல்) அவர்களுக்கு எடுத்து காட்டப்பட்டது அவ்வாறு பெண்கள் நரகத்தில் அதிகம் செல்வதற்கு காரணம் என்ன? நபி(ஸல்) கூறிய இரண்டு காரணங்களை குறிப்பிடுக?
1. பெண்கள் அதிகமாக சபிப்பதும், 2. கணவனுக்கு மாறு செய்வதும் ஆகும்
ஆதாரம்:

13. ஜின்களை எதற்காக படைத்தான் ? என்பதை அல்லாஹ் திருமறையில் ஸூரத்துத் தாரியாத்தில் எந்த வசனத்தில் ? என்ன கூறுகிறான் ?
இன்னும் ஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை குர் ஆன் 51:56
(எனவே ஜின்களை வைத்து ஏதும் காரியம் செய்கிறோம் என சொல்லுவது குர் ஆனுக்கு மாற்றமாகும்)

14. திருக்குர் ஆனில் சூரத்துல்ஸபாவில் ஜின்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வசனம் எண் எது ?
விடை: அத்தியாயம் :34 வசனம் 14

15. யார் வட்டியை உண்கிறார்களோ அவர்கள் (மறுமையில்) ஷைத்தான் பிடித்தவனைப் போலவே எழுவார்கள் என்று கூறும் இறை அத்தியாயம் வசனம் என்ன ?
விடை: அத்தியாயம் 2 வசனம் 275

16. வித்ரு தொழுகை எத்தனை ரக் அத்திலிருந்து எத்தனை ரக் அத்துகள் வரை தொழலாம் ?
விடை: 1 , 3, 5, ரக் அத்துகள் ஆதாரம் : நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

17. திருக்குர் ஆனில் தொழாதவர்களின் நிலை என்ன என்பதை எவ்வாறு எச்சரிக்கிறது குறிப்பிடுக.
குர் ஆனில் தொழாதவர்கள் நிலை அவர்களை நரகத்தில் கொண்டு சேர்க்கும் என எச்சரிக்கிறது.
“குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது எது என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும் ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள்
குர் ஆன் அத்தியாயம் 74: வசனங்கள் 41-43.

18. ஷபே பராஅத்(பராத் இரவு) எந்த மொழிச்சொல் ?
விடை: பார்சி (Farsi) ஈரானிய மொழி

19. குர் ஆனில் பெயர் கூறப்பட்ட வேதங்கள் எத்தனை ? எந்தெந்த நபிமார்களுக்கு அவ்வேதங்கள் அருளப்பட்டது.
4 வேதங்கள் 1.தாவூத் (அலை)- ஸபூர் 2.மூஸா (அலை) – தோரா 3. ஈஸா (அலை) இன்ஜில் (பைபிள்) 4.முஹம்மது நபி(ஸல்) – அல் குர்ஆன்

20. திருக்குர் ஆனில் அத்தியாயம் 7, அல் அராபில் வசன எண்கள் 163,164,165,166 இந்த வசனங்கள் கூறும் செய்திகள் என்ன ?
நன்மையை ஏவி தீமையை தடுக்கும் கூட்டம் உங்களிடையே இருக்க வேண்டும் என்பதையே இந்த வசனங்கள் கூறும் செய்திகள் ஆகும். அவ்வாறில்லாமல் நன்மையை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கும் அல்லது தீமையை மட்டும் தடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கும் அவ்வாறு செய்யாமல் நன்மையையும் ஏவவேண்டும் அதே சமயம் தீமையையும் தடுக்க வேண்டும் என்பதே இதன் விளக்கமாகும்.

21. நபி(ஸல்) அவர்களின் வாழ்நாளில் மனைவி, மகன், பேரப்பிள்ளைகள் ஸஹாபாக்கள் இறந்ததற்காக 3,7,40 ஹத்தம், பாத்திஹா ஓதினார்களா? ஓதினார்கள் என்றால் அதற்கான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை குறிப்பிடுக. நபி(ஸல்) அவர்கள் 3,7,40 ஹத்தம், பாத்திஹா ஓதியதற்கான எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களோ இல்லை. இது இந்திய முஸ்லீம்கள் மட்டும் ஏற்படுத்திக்கொண்ட ஒரு வழக்கம்.

22. தொழுகையில் ஜம் உ மற்றும் கஸ்ர் என்றால் என்ன ? விளக்கம் தருக ?
ஜம்உ என்பது சேர்த்து தொழுதல் அதாவது குறிப்பிட்ட இரண்டு கடமையான தொழுகைகளை பிரயாணத்தின் போது ஒரே நேரத்தில் தொழுவது.
கஸ்ர் என்பது கடமையான தொழுகையை பிரயாணத்தின் போது சுருக்கித்தொழுவது உதாரணமாக 4 ரக் அத் தொழுகையை 2 ரக் அத் களாக தொழுவது. சுபுஹூ மற்றும் மஹ்ரிப் தொழுகையை மட்டும் சுருக்கித்தொழ முடியாது. குறிப்பு : பிரயாணம் என்பது 3மைலோ அல்லது 3 பர்ஸக் அளவோ (25 கி.மீ. க்கு மேல்)
அறிவிப்பாளர் : யஹ்யா பின் யஸீத்(ரலி) நூல் : முஸ்லிம்


23. ஒருவருடைய இறப்பிற்கு பிறகு இறந்தவரிடம் போய் சேரக்கூடிய மூன்று விஷயங்களை பற்றி நபி(ஸல்) எதைக்கூறினார்கள்?
நிரந்தர தர்மம், பயன் தரும் கல்வி, அவருக்காக துஆ செய்யும் ஸாலிஹான பிள்ளைகள்
அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல் : முஸ்லிம்


24. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா என்று வரும் குர் ஆன் வசனங்களின் எண்களை அத்தியாயத்துடன் குறிப்பிடுக.
அத்தியாயம் 2 வசனம்44, அத்தியாயம் 4 வசனம் 82 அத்தியாயம் 6 வசனம் 50

25. நபி(ஸல்) அவர்கள் சுன்னத் தொழுகையை எங்கே அதிகம் தொழுதார்கள் ? வீட்டிலா பள்ளியிலா ?
நபி(ஸல்) அவர்கள் கடமையான தொழுகையை தவிர சுன்னத்தான, நபிலான தொழுகைகளை வீட்டில் தான் அதிகம் தொழுதார்கள்.

சரியான பதிலை செய்யவும்

26. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும் அதற்கு கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள் மேலும் இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சம்மானவர்கள் ஆவர் என்று கூறினார்கள் இதன் அறிவிப்பாளர் யார் ?
உமர்(ரலி) அலீ (ரலி) ஜாபிர்(ரலி) விடை – உமர் (ரலி)

27. உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி கேட்டால் அவர்களை தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரியில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் யார் ?
இப்னு உமர் (ரலி) அபு ஸயீத் (ரலி) உம்மு ஹிஷாம் (ரலி)
விடை – இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி 900,873,865

28. லைலத்துல் கத்ரை ரமலானின் கடைசி பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் – நூல் புகாரி அதன் அறிவிப்பாளர்
யார்?
உமர் (ரலி) ஆயிஷா(ரலி) அனஸ்(ரலி)
விடை – ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 2017


29. நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கூட்டத்தினர் வந்தனர், அவர்களில் 9 நபர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் பைஅத் செய்தார்கள். ஒருவரிடம் மட்டும் செய்யவில்லை அல்லாஹ்வின் தூதரே இவருக்கு ஏன் பைஅத் செய்யவில்லை என மற்றவரில் ஒருவர் கேட்டபோது இவரிடத்தில் தாயத்து உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதை அறுத்து எறிந்து விட்டு அவரிடத்தில் பைஅத் செய்தார்கள். பின்னர் யார் தாயத்தை அணிந்து கொண்டாரோ அவர் இணை வைத்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் – நூல் அஹமத் இதன் அறிவிப்பாளர் யார்?
அபூ ஹூரைரா (ரலி) உக்பா(ரலி) அய்யூப்(ரலி)
விடை-உக்பா (ரலி) நூல் : அஹ்மத் 4-156

30. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் தன் அன்பளிப்பை திரும்ப பெறுபவன் வாந்தி எடுத்த பிறகு அதை மீண்டும் தின்கின்ற நாயை போன்றவன் ஆவான். இந்த ஹதீஸ் இடம் பெற்ற நூல் புகாரி (2589) இதன் அறிவிப்பாளர் யார்?
அஸ்மா (ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) அபூதர்(ரலி)
விடை-இப்னு அப்பாஸ் (ரலி)

No comments: